தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த படத்தை பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் இரவு பகலாக பணி செய்து வருகின்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் ’கோட்’ திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் ஏஐ டெக்னாலஜி மூலம் அவரது காட்சி உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. கேப்டன் விஜயகாந்த் காட்சிகளை தன்னுடைய அனுமதி இன்றி யாரும் உருவாக்க கூடாது என்று சமீபத்தில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருந்த நிலையில் ’கோட்’ படக்குழுவினர் முறைப்படி அவரிடம் அனுமதி வாங்கி தான் இந்த காட்சிகளை படத்தில் இணைத்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.