கமல்ஹாசனின் மகள் இளமை வாழ்க்கையில் நடந்த பெரும் சோகங்கள்! அவரே கூறிய அதிர்ச்சி தகவல்

tubetamil
0

 உலகநாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசனின் சிறுவயதில் நடந்த சில சோகமான விடயங்களை நேர்காணல் ஒன்றின் மூலம் கூறியுள்ளார்.

அக்ஷரா ஹாசன் தனது சிறுவயதில் எதை எல்லாம் அவர் தவற விட்டுள்ளார் அவருக்கு ஏற்பட்ட சோகநிலைமைகளை கூறியுள்ளார். அவர் கூறும் போது "நான் எனக்கு கிடைத்த நிறைய வாய்ப்புக்களை தவற விட்டுள்ளேன்.


இது என் குழந்தை தனத்தால் மட்டும் தான். அந்த விடயங்களை விடுவோம் அதை நான் கூற விரும்பவில்லை. ஆனால் நான் என் அப்பாவிடம் அப்போதே கூறினேன் அப்பா நான் கோலேஜ் போகாவிட்டாலும் 18 வயதிற்கு பின்னர் கட்டாயம் வேலைக்கு போவேன் வீட்டில் சும்மா இருக்க மாட்டேன் என கூறினேன்.

அப்போது அப்பா என்னிடம் கேட்டார் ஏன் அப்படி சொல்கிறாய் என. நான் கூறினேன் அப்பா ஏன் நான் அப்படி கூறுகிறேன் தெரியவில்லை என்றேன். அப்போது அவர் ஒன்றும் கூறவில்லை.

இதன் பின்னர் எனது பத்தாம் வகுப்பில் இரு தடவைகள் பரீட்சையில் தோல்வி அடைந்தேன். என்க்கே நான் ஒரு மக்கு போல உணர்வு வந்தது. இருந்தாலும் எனக்கு ஒரு நம்பிக்கை உள்ளது.

படிப்பு வராவிட்டால் என்ன நடனத்துறையில் சாதிக்க நினைத்தேன். எனக்கு நடனத்துறையில் ஒரு professional dancer ஆக வேண்டும் என்பதனால் நான் சிங்கப்பூரில் உள்ள  லசா பல்கலைகழகத்தில் படித்தேன்.


அந்த பல்கலைகளகத்தில் CSTD பரீட்சை எழுதினேன். அங்கே நான் நினைத்தபடியே அதிகமான புள்ளிகளை பெற்றேன். எனக்கே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நிறைய நாள் நீடிக்கவில்லை.

நடனம் ஆடும் சமயத்தில் எனது கால்களில் அடிபட்டு ஆறு மாதங்கள் bed rest இல் இருந்தேன். இதன் பின் என்னுடைய அனைத்து கனவுகளும் முடிந்து விட்டது'. என மிகவும் அப்பாவித்தனமாக கவலையில் சிரித்த முகத்துடன் கூறினார்.

இவர் படிக்கவில்லை என்றாலும் வீட்டில் வேலையில்லாமல் சும்மா இருக்க கூடாது என்பதற்காக இவ்வளவு முயற்ச்சி செய்தது மிகவும் பெருமை படுத்த கூடிய விஷயமாகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top