எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் நவம்பரில் பங்களாதேஷ் ‘ஏ’ மற்றும் ‘ஏ’ கிரிக்கட் அணிகள் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்கின்றன.
இதன்படி ஆகஸ்ட் 10ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி மற்றும் 17ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரையான இரண்டு நான்கு நாள் ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் 'ஏ' அணிகள் களமிறங்குகின்றன.இதனையடுத்து ஆகஸ்ட் 23, 25 மற்றும் 27 ஆகிய திகதிகளில் மூன்று 50 ஓவர் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதேவேளை எதிர்வரும் நவம்பரில், இலங்கை ‘ஏ’ அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகளில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானுக்குச் செல்கிறது.
இதன்போது இரண்டு, நான்கு நாள் ஆட்டங்கள் நவம்பர் 11-14 மற்றும் நவம்பர் 18-21 வரையிலும், 50 ஓவர் போட்டிகள் நவம்பர் 25, 27 மற்றும் 29 ஆகிய திகதிகளிலும் நடைபெறவுள்ளன.