சமீபத்தில் சீரியல் நடிகருடன் நிச்சயதார்த்தம் செய்த நடிகை கண்மணி மனோகரன் வெளியிட்டுள்ள ஜோடி போட்டோஸ் வைரல்.
பிரபல தொலைக்காட்சியில் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் நடித்திருந்த நடிகை கண்மணி மனோகரனுக்கு பிரபல நடிகர் அஸ்வத்துடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ரசிகர்களின் முக்கிய ரியல்களில் ஒன்றாக இருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் முதன்மை கேரக்டரான கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை கண்மணி மனோகரன்.அதே சமயம் ஒரு கட்டத்தில் கண்மணி மனோகரன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த நிலையில் கண்மணிக்கு அஸ்வத் ப்ரபோஸ் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.