அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை படுகொலை செய்ய முயற்சி நடந்தமை தொடர்பில் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது 'X' தளத்தில் இட்ட பதிவிலேயே இதனை கூறியுள்ளார்.
அத்துடன், டொனால்ட் ட்ரம்ப் தற்போது நலமாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அரசியலில் இலங்கையர்களும் இவ்வாறான வன்முறைகளால் சூழப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.