தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.
கங்குவா படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா44 இப்படத்தை கார்த்திக் சுப்ராஜ் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே முதல் முறையாக ஜோடியாக நடிக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று முடிந்துள்ளது. வருகிற ஜூலை 23ஆம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் என்பதினால், அந்நாளில் சூர்யாவின் படங்களின் அப்டேட் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில், ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் அன்று கங்குவா படத்தின் முதல் பாடலை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். அதே போல் சூர்யா 44 படத்தின் தலைப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தகவல் கூறுகின்றனர்.