இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு பதிலாக புதிய திட்டத்தை நகர்த்தும் இந்தியா..!

tubetamil
0

 இலங்கையின் பொருளாதாரத்தின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு புதிய கடன் அல்லது கடன் வரி (எல்ஓசி) திட்டங்களை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் அதற்குப் பதிலாக, மானியத் திட்டங்கள் மற்றும் இணைப்புத் திட்டங்களைப் போன்ற முதலீடுகளில் இந்தியா தமது கவனத்தைத் திருப்பும் என்று தெரியவந்துள்ளது 

மாஹோவில் இருந்து அனுராதபுரம் வரையிலானதொடருந்துக்கான சைகை விளக்கு அமைப்பை வடிவமைத்தல், நிறுவுதல், சோதனை செய்தல் மற்றும் இயக்குதல் என்ற தற்போதைய கடன் இந்த திட்டங்களில் முதன்மையானது.


இந்த திட்டம் 14.90 மில்லியன்  அமெரிக்க டொலர்கள் கடன் வரியில் மேற்கொள்ளப்படுகிறது. 

எனினும் புதிய முடிவால் இதுபோன்ற செயல் திட்டங்கள் பாதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய திட்டப்படி இந்தியா, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தியை மானிய திட்டமாக மாற்றியுள்ளது.இதற்காக 60 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக இந்தியாயாவால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதும், தற்போது அது மானியமாக மாற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜப்பானும் நிறுத்தப்பட்ட 11 திட்டங்களை மீண்டும் தொடங்குவதாக அறிவித்தது,

ஆனால் நாட்டில் நிலைமை திருப்திகரமாக மேம்படும் வரை எந்த புதிய யென் கடனுக்கும் ஒப்புதல் அளிக்கப்போவதில்லை என்று பின்னர் அறிவித்து விட்டது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top