ஓமானில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்..!

tubetamil
0

  ஓமான் தலைநகர் மஸ்கட்டில் பணிபுரியும் இலங்கையர்களை பாதுகாப்பாக இருக்குமாறு அந்த நாட்டுக்கான  தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஓமானின் அல் -வாடி அல் -கபீர் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பாகிஸ்தான் பிரஜைகள் பலியாகியுள்ளதோடு பலர் காயமடைந்தனர்.

இந்தப் பகுதியில் அதிகளவான இலங்கையர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.


இந்த நிலையில். அங்கு மோதல் நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால் அங்குள்ள இலங்கையர்களை, குறித்த பகுதிக்குச் செல்ல வேண்டாம் என ஓமானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், அங்குள்ள இலங்கையர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லையாயின், ஓமானுக்கான  தூதரகத்தின் 24 69 78 410 என்ற இலக்கத்திற்கோ அல்லது ஓமான் பொலிஸாரின் 24 52 1885 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு ஓமானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top