முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் விபத்துக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருவலகஸ்வெவ பிரதேசத்தில் இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
வீதியில் குறுக்கிட்ட துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரை காப்பாற்றும் நோக்கில் காரை திசைமாற்றிய போது விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது கார் வீதியை விட்டு விலகியதாக தெரிவிக்கப்படுகிறது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.