ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமித்த ரணில்..!

tubetamil
0

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாட்டின் புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க  நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம், இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. 

பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அரசமைப்புப் பேரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளதென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று தெரிவித்திருந்தார். மேலும், குறித்த தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.



அதேவேளை, கடந்த 26ஆம் திகதி அரசியலமைப்பு பேரவையினால் முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் இராஜரத்தினத்தின்பதவிகால முடிவு தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டதுடன் அவர் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.

இதனை தொடர்ந்து, ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க, பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது அவர், அரசியலமைப்பு பேரவையின் ஏகமன அங்கீகாரம் பெற்று சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top