கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடக செயலாளர் நெல்சன் எதிரிசிங்க என்பவருக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகேன் ரட்ட அமைப்பின் தலைவர் சஞ்ய மஹாவத்த இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
கடந்த மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூலை மாதத்தில் நெல்சனின் வங்கிக் கணக்கில் பாரியளவு தொகை பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.வங்கியின் மாத்தளை கிளையில் நெல்சனின் வங்கிக் கணக்கிற்கு இவ்வாறு அதிகளவு தொகை பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பெருந்தொகை பணம் வைப்பிலிடப்பட்டமை குறித்து விசாரணை நடத்துமாறு கோரி இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள், ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் எவரும் இவ்வாறு முறைப்பாடு செய்ய முன்வருவதில்லை என சஞ்சய மஹாவத்த தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முறைப்பாடு செய்யும் போது நாம் கைது செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நாட்டுக்கு நன்மை செய்யும் நோக்கில் இவ்வாறு போராடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.