பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் செயற்படுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசபந்து தென்னக்கோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யக் கோரி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்டோர் தாக்கல் செய்த இந்த 9 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே உயர் நீதிமன்றம் குறித்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.