இந்தியா விலகினால் எந்த அணிக்கு வாய்ப்பு கிடைக்கும்?

tubetamil
0

 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. உலகின் எட்டு முன்னணி கிரிக்கெட் அணிகள் மோதும் இந்த தொடர் உலகக் கோப்பைக்கு நிகரான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த முறை சாம்பியன்ஸ் ட்ராபி பாகிஸ்தான் நாட்டில் நடைபெறுவதால், அதில் இந்திய அணி பங்கேற்காது என கூறப்படுகிறது. ஒருவேளை இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்காமல் விலகவும் வாய்ப்பு உள்ளது.


2008ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை நிறுத்தி விட்டது. 2023 ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற இருந்தது. ஆனால், பிசிசிஐ அந்த தொடரில் இந்திய அணி ஆடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்றினால் மட்டுமே பங்கேற்போம் என உறுதியாக நின்று, பாகிஸ்தான் செல்வதை தவிர்த்து. அப்போது இந்திய அணி ஆடிய போட்டிகள் மட்டும் இலங்கையில் நடந்தன.




இந்த நிலையில், இந்திய அணி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்ல இந்திய அரசு அனுமதிக்காது என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக, சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் துபாய் அல்லது இலங்கையில் நடத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது.

 ஆனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த கோரிக்கையை நிராகரிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில், மற்ற ஏழு அணிகளும் பிசிசிஐ-க்கு மட்டும் சிறப்பு ஏற்படுகள் செய்வதை ஒப்புக்கொள்ளுமா? குறிப்பாக தொடரை நடத்தும் பாகிஸ்தான் இதற்கு ஒப்புக்கொள்ளுமா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அதே சமயம் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்காமல் போனால், அதனால் ஒளிபரப்பு உரிமம் மற்றும் விளம்பர வருவாய் ஆகியவற்றில் மிகப் பெரிய அளவில் இழப்பு ஏற்படும்.


இந்த நிலையில், இந்திய அணி இந்த பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இருந்து விலகும் முடிவை எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால் இந்திய அணிக்கு பதிலாக எந்த அணி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பங்கேற்கும்? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.



2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில் லீக் சுற்றின் புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தானையும் சேர்த்து முதல் எட்டு இடங்களை பிடித்த அணிகள் சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கு தகுதி பெற்று உள்ளன. அதன் அடிப்படையில், ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களை பிடித்த இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கு தகுதி பெறவில்லை.


தற்போது இந்திய அணி விலகினால் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் இலங்கை அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னேறும். தற்சமயம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பிசிசிஐ இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற டென்னிஸ் உள்ளிட்ட பிற விளையாட்டுத் தொடர்களுக்கு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் சென்றுள்ளனர். 

என்பதால் இந்திய அணி நீண்ட காலம் கழித்து பாகிஸ்தான் செல்ல இந்திய அரசு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கவும் வாய்ப்பு உள்ளது

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top