ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன்..!

tubetamil
1 minute read
0

 புத்தளம் பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் மாணவர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளானவர் பிரதான நிலை பாடசாலையின் கணித பாடத்திற்கு பொறுப்பான ஆசிரியர் என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கத்தியால் குத்தப்பட்ட ஆசிரியர் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக பாடசாலையின் ஆசிரியர்களால் அழைத்துச் செல்லப்பட்டார்.

பிரதான பாடசாலையின் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவனே ஆசிரியர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவன் பாடசாலைக்கு வந்து கொண்டிருந்த போது, ​​பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் ஆசிரியர் அவரிடம் கேட்டதையடுத்து மாணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரின் வயிற்றில் குத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.


கத்திக்குத்துக்கு இலக்கான ஆசிரியர் கீழே விழுந்ததாகவும், அந்த மாணவன் கத்தியை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், மாணவனுக்கும் ஆசிரியருக்கும் இடையில் என்ன பிரச்சினை காரணமாக கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றது என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த ஆசிரியர் மாணவனின் தலைமுடி தொடர்பில் சில விடயங்களை கூறியமையும் இதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்ட உயர்தரப் பாடசாலை மாணவனை, கத்திக்குத்துத் தாக்குதல் இடம்பெற்ற சிறிது நேரத்திலேயே கைது செய்துள்ளனர்.



#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top