சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக குழப்பத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் செய்தி சேகரிப்புக்காக சென்றிருந்த யூடியுபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் இன்று வைத்தியசாலைக்கு சென்றுள்ள நிலையில் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, இன்று வைத்தியசாலைக்கு முன்பாக செய்தி சேகரிப்பினை மேற்கொள்ள சென்றிருந்த யூடியுபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக பொதுமக்கள் கூடி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில் மீண்டும் இன்று பொதுமக்கள் கூடலாம் என முன்னெச்சரிக்கையாக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனையும் மீறி வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலைக்கு சென்று அலுவகத்தில் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.
இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.