எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றதன் பின்னர் அரச ஊழியர்களின் சகல கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அரச ஊழியர்கள் மற்றும் நாட்டு மக்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும்.
நாடு முழுவதும் தற்போது முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கும் தமது கட்சிக்கும் தொடர்பில்லையெனவும், அதற்கு தமது கட்சி தலைமை தாங்கவில்லை எனவும் நளின் பண்டார தெரிவித்தார்.