அண்மை காலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சம்மாந்துறை - குவாசி நீதிமன்ற செயற்பாடுகள் இன்று மீண்டும் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கையானது, நீதிச்சேவை ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய, சம்மாந்துறை - குவாசி நீதிமன்றத்தின் பதில் குவாசி நீதிபதி அஹமட் லெவ்வை ஆதம்பாவா தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த காலங்களில் பொதுமக்களுடன் ஏற்பட்ட முரண்பாடு, சமூக ஊடகங்களில் வெளியாகிய காணொளி மற்றும் இதர குற்றச்சாட்டுக்கள் ஆகியன காரணமாக முன்னாள் சம்மாந்துறை - குவாசி நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, தற்போது நீதிமன்ற செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்போது, சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், சம்மாந்துறை பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் மற்றும் மனித எழுச்சி நிறுவன (HEO) பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.