பாதாள உலகக் குழுக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை..!

tubetamil
0 minute read
0

 பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பாதாள உலகக் குழுக்களிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் எவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்  போது தெரிவித்துள்ளார்.

அதுருகிரிய பிரதேசத்தில் கிளப் வசந்த என்ற வர்த்தகர் உள்ளிட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் இவ்வாறு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் பெயர் பட்டியல் ஒன்றை வெளியிட்டு அவர்களை படுகொலை செய்யப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


அச்சுறுத்தல்கள் வந்தாலும் பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தும் பணிகளிலிருந்து பொலிஸார் இடைவிலகப் போவதில்லை.

குறிப்பாக சமூகத்தில் புழக்கத்தில் உள்ள ஆயுதங்களை களையும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, ஆயுதங்கள் பொலிஸாரின் பொறுப்பிற்கு எடுத்துக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top