ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபாணை இம்ரான் தனது பிறந்தநாளை உயர்தர கப்பலில் கொண்டாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் கிளப் வசந்தவின் உடல் தகனம் செய்யப்பட்ட நாளில் கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது.
இது கஞ்சிபாணை இம்ரானின் 38வது பிறந்தநாள் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி கிளப் வசந்தவை கொலை செய்ய துபாயில் பதுங்கியிருக்கும் பாதாள குழு உறுப்பினரின் ஆதரவை கஞ்சிபானி இம்ரான் நாடியதாக கூறப்படுகிறது.
கிளப் வசந்தவின் கொலை சம்பவத்தில், துப்பாக்கிதாரிகள் பிரவேசித்த மற்றும் தப்பிச்செல்ல பயன்படுத்திய வாகனங்களுக்கான கொடுப்பனவு மற்றும் உதவிகளை தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான துலான் மஞ்சுளவே வழங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதேவேளை குறித்த வர்த்தக நிலையத்தினுடைய உரிமையாளரின் சகோதரரிடமும் வாக்குமூலம் பெறப்படுவதாகக் குறிப்பிடப்படுகின்றது.
வர்த்தக நிலையத்தைத் திறந்து வைப்பதில் இருந்து துப்பாக்கிதாரிகளுக்கான தகவல்களைக் காணொளி வாயிலாக வழங்கினாரா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸாரால் தெரிவித்துள்ளது.