ஆரோக்கியமான கற்றாழையை நாம் அனைவரின் வீடுகளிலும் வளர்க்கின்றனர்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, கற்றாழை செடியை வீட்டில் நட்டால், அது அந்த நபரின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும் என சொல்லப்படுகிறது.
அதேபோன்று கற்றாழை செடியை தவறான திசையில் வைத்தால் வீட்டில் கஷ்டம் வரும் என சொல்லப்படுகிறது.
அந்தவகையில், கிழக்கு திசையில் இருந்து நேர்மறை ஆற்றல் நுழைவதால், வீட்டின் கிழக்கு திசையில் கற்றாழை செடியை நட்டால், எதிர்மறை ஆற்றல் பரவ ஆரம்பித்து, வீட்டில் சச்சரவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
பொதுவாக காலையில் எழுந்தவுடன் கற்றாழை செடியை பார்ப்பது நல்லதல்ல.
உங்கள் படுக்கையறையில் கற்றாழை செடியை நட்டால், காலையில் இந்த செடியைப் பார்ப்பது உங்கள் வழக்கத்தைக் கெடுத்துவிடும்.
படுக்கையறையில் ஒரு முள் செடி இருப்பது குடும்ப வாழ்க்கையிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் குடும்பத்தின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. இதனால் வீட்டில் வாஸ்து தோஷம் ஏற்படுகிறது.