திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 19 வயதுடைய யுவதி ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபரை இம்மாதம் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று தீர்ப்பளித்துள்ளது.
கந்தளாய் நீதிமன்ற நீதவானால் இன்றுஇந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பேரமடுவ - அக்போபுர, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், 19 வயதுடைய யுவதியை ஒரு வருட காலமாக காதலித்து வந்த நிலையில் யுவதியின் வீட்டுக்கு தெரியாமல் அவரை வான்எல பகுதிக்கு அழைத்துச் சென்று தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தியதாக தெரிவித்து அக்போபுர பொலிஸ் நிலையத்தில் யுவதியின் பெற்றோர்கள் முறைபாடு செய்துள்ளனர்.
இதற்கமைய, கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் யுவதி மருத்துவ அறிக்கைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.