கால் ஆட்டும் பழக்கம் இருக்குதா? உடனே நிறுத்திடுங்க..!

tubetamil
0

 நம்மில் சிலர் அமர்ந்து கொண்டிருக்கும் போது கால் ஆட்டும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதற்கான காரணத்தையும், பாதிப்பையும் தெரிந்து கொள்ளலாம்.

இன்று மனிதர்களில் சிலர் அலவலகத்தில் வேலை செய்யும் போதோ, வீட்டில் அமர்ந்து கொண்டு டிவி பார்க்கும் போது கால்களை ஆட்டுவதை நாம் கவனித்திருப்போம்.

முன்பு இவ்வாறு கால் ஆட்டுவதை அவதானித்தால் பெரியவர்கள் சத்தம் போடுவார்கள். ஆம் இவ்வாறு கால் ஆட்டுவது ஒரு கெட்டப்பழக்கமாக பார்க்கப்படுகின்றது.


நம்முடைய உடலானது நாம் எந்தவேலையும் செய்யாமல் இருந்தால் கூட அது செயல்பாட்டில் தான் இருக்கும். அதாவது தசைகள், நரம்புகள் தனது வேலைகளை செய்து கொண்டிருப்பதால், ரத்த ஓட்டத்தினை பராமரிக்கவும், நமது உடலை சமநிலையில் வைத்திருக்கவும் உதவுகின்றது.

கால்களை ஆட்டுவது என்பது சாதாரண பழக்கமாக இருந்தாலும், இவற்றிலுள்ள தீமைகளை தெரிந்து கொள்வோம்.


ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் தசை பிடிப்பு உணர்ச்சி ஏற்படுவதால் உடம்பு அசௌகரியம் ஏற்படும். கால் ஆட்டினால் அந்த உணர்வு தணிவதுடன், ரத்த ஓட்டத்தை அதிகரித்து, தசைகளை நீட்டி நரம்புகள் தூண்ட பெரிதும் உதவுகின்றதாம்.

மன அழுத்தம் மற்றும் பதட்டத்தில் இருப்பவர்கள் உடல்ரீதியாக பல விளைவுகளை சந்திப்பார்கள். இத்தகைய சூழ்நிலையில், கால் ஆட்டினால் பதற்றம் குறைவதுடன், உடலும் அமைதிப்படுத்த சிறந்த வழியாகும்.


சில தருணங்களில் மநம் மனம் எதிலும் ஆர்வம் இல்லாமல் சலிப்பாக இருக்கும் போது, இந்த சலிப்பை போக்கி மனதை செயல்களில் வைக்கின்றது.

மருத்துவத்தின் படி தேவையில்லாமல் கால்களை ஆட்டும் பழக்கம், Restless Legs Syndrome(RLS) எனப்படும் நோயாக அறியப்படுகிறது.

நீங்கள் பிறரிடம் பேசும்போது கால் ஆட்டிக்கொண்டு பேசினால் உங்கள் மீது இருக்கும் மரியாதை குறைந்துவிடுவதுடன், மற்றவர்களின் கவனம் சிதறடித்து, உங்களை விட்டு விலகவும் செய்யலாம்.

அதிகமாக கால் ஆட்டிக் கொண்டே இருந்தால் கால் வலி போன்ற பிரச்சனைகள் மட்டுமின்றி மூட்டு வலி பிரச்சனையும் ஏற்படும். RLS பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து கால்களை ஆட்டிக்கொண்டிருந்தால் அறிகுறிகள் மோசமாகவும் மாறும்.


வேலை பார்க்கும் இடம், பொது இடங்களில் கால் ஆட்டினல், தொழில் சார்ந்த விடயங்கள் பாதிப்படையும். ஆதலால் உடனே இந்த பழக்கத்தை நிறுத்தவும். உங்களது கவனத்தை திசை திருப்புவதற்கு, புத்தகம் படிப்பது, பாட்டு கேட்பது அல்லது வேறு ஏதேனும் விடயங்களில் கவனம் செலுத்தலாம்.

கால் ஆட்டுவதை நிறுத்த முடியாமல் இருந்தால், உங்களது கால்களை மேஜை மீது தூக்கி வைத்துக் கொள்ளவும், கால்களில் வலி ஏற்பட்டால் சிறிது தூரம் நடப்பது நல்லது. இதனால் ரத்த ஓட்டம் மேம்படுவதுடன் கால்களில் உள்ள வலியும் குறையும்.







Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top