தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் பிரபலங்களை பெரிய அளவில் கொண்டாடுவார்கள்.
அவர்களின் வீட்டில் ஏதாவது ஸ்பெஷல் விஷயம் நடந்தால் தங்களது வீட்டில் நடப்பது போல் நினைப்பார்கள் ரசிகர்கள். ஆனால் தற்போது ஓரு பிரபலத்தின் இறப்பு செய்தி வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனோஜ், குணால் நடிப்பில் வெளிவந்த வருஷமெல்லாம் வசந்தம் என்ற படத்தை இயக்கியவர் ரவி ஷங்கர். இவர் நேற்றிரவு கே கே நகரில் உள்ள அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
இயக்குனர் பாக்யராஜ், விக்ரமன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர், சூர்யவம்சம் படத்தில் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களையும் எழுதியுள்ளார்.