எனக்கு ராஜபக்சக்களைப் பாதுகாக்க வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் கிடையாது எனவும் ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராகக் குற்றப் பிரேரணை வந்தபோது அவரை மட்டுமே பாதுகாத்துள்ளேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“கட்சியைவிட தாய் நாடுதான் எமக்கு முக்கியம். தாய் நாட்டை நேசித்துவிட்டுதான் நாம் கட்சியை நேசிப்போம்;. ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்கள் இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் செயற்பட்டுள்ளனர்.
நம்பிக்கையின் அடிப்படையில்தான் சவாலை நான் பொறுப்பேற்றேன். அதற்கு மொட்டுக் கட்சியிலும் ஆதரவு வழங்கியது. அந்தக் கட்சியின் ஆதரவு இருந்ததால்தான் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடிந்தது.” என அவர் தெரிவித்துள்ளார்.