நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராயன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.
தனுஷுடன் இணைந்து இப்படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் தான் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா பிரமாண்ட முறையில் நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில் இப்படத்திற்கு நேற்று சென்சார் நடைபெற்றுள்ளது. இதில் படம் முழுக்க ரத்தம் தெறிக்க தெறிக்க காட்சிகள் இருப்பதால் ராயன் படத்திற்கு A சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தில் சில காட்சிகளை நீக்கினால் U/A சான்றிதழ் தருகிறோம் என சென்சார் போர்டில் கூறியுள்ளனர்.
ஆனால், படத்தில் எந்த காட்சியை வெட்ட வேண்டாம் நான் படத்தை பார்க்கிறேன், அதன்பின் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கூறியுள்ளார். இதை தொடர்ந்து ராயன் படத்தை பார்த்த கலாநிதி மாறன், படம் நன்றாக வந்துள்ளது, சூப்பர் என தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.