இந்தியாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கைக்கு அடுத்த மாதம் விஜயம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் உட்கட்டுமான மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் நிலை குறித்து கண்டறிவதற்காக இந்த விஜயம் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் இந்த விஜயத்தில் இணைந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அபிவிருத்தி திட்டங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றது என்பதை மதிப்பாய்வு செய்யும் வகையிலும் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் வகையிலும் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடன் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்திக்கொள்ள இந்த விஜயம் உதவும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பிரதிநிதிகள் இலங்கையின் முக்கியஸ்தர்களுடன் பல்வேறு பேச்சு வார்த்தைகளை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது.