இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் வீட்டில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு தலங்கம பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், திருடப்பட்ட மடிக்கணனி, கையடக்க தொலைபேசிகள், 5 விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், நகைகள் மற்றும் 10,000 ரூபா பணம் ஆகியன சந்தேகநபரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.மேலும், திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பல திருட்டு சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபரை ஹோமாகம நீதிமன்றத்தில் பொலிஸார் முற்படுத்தவுள்ளனர்.