அரச சேவையில் உள்ள வெற்றிடங்களை உயர்தர சித்தியில் மாணவர்களின் இசட் ஸ்கோர் பெறுமதியின் அடிப்படையில் நிரப்புமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன், அரசியல் தேவைகள், தனிப்பட்ட நலன்கள் மற்றும் விருப்பு வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள், அரச சேவைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குறித்த யோசனையை நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட உறுப்பினராக அவர் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.