ஓமானிய தலைநகர் மஸ்கட்டில் உள்ள மசூதி அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பலர் காயமடைந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
எனினும் குறைந்தபட்சம் ஒரு துப்பாக்கிதாரி இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
சூழலைச் சமாளிக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் விசாரணையின் ஒரு பகுதியாக சாட்சியங்களை சேகரிப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அரேபிய தீபகற்பத்தில் வளைகுடாவின் வாயிலில், மூலோபாய ரீதியாக அமைந்துள்ள ஓமானில் இத்தகைய வன்முறைகள் அரிதாகவே இடம்பெறுகின்றமை குறிப்பிட்டத்தக்கது.