பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழ் அகதிகளின் மகள் என்னும் நிலையிலிருந்து, இன்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையை எட்டியுள்ளார் ஒரு பெண்.
இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 4ஆம் திகதி பிரித்தானியாவில் நடைபெற்ற தேர்தலில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு மாபெரும் வெற்றி பெற்று பிரித்தானியாவில் ஆட்சி அமைத்துள்ளது லேபர் கட்சி.
வரலாறு படைத்த அந்த தேர்தலில், இலங்கைத் தமிழ்ப் பின்னணி கொண்ட பெண்ணொருவர் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பே அவரைக் குறித்த செய்திகள் வெளியான நிலையில், தேர்தலுக்குப் பிறகு மீண்டும் பிரித்தானிய ஊடகங்கள் அவரை பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரான 'தமிழ் அகதிகளின் பிள்ளை' என விமர்சித்து, அவரைக் குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளன. அவரது பெயர் உமா குமரன் (36).
ஸ்ட்ராட்ஃபோர்ட் அண்ட் போ (Stratford and Bow) என்ற தொகுதியில் போட்டியிட்ட உமா குமரன், 19,145 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரது தொகுதியில் போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல், 3,144 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காவது இடத்தையே பெற முடிந்தது.
உமா குமரனின் பெற்றோர், இலங்கையில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக 1980களில் இலங்கைக்கு புலம்பெயர்ந்தார்கள்.
கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமரன், அங்குள்ள குயின் மேரி பல்கலையில் கலைத்துறையில் அரசியல் சிறப்பு இளங்கலைப் பட்டப்படிப்பையும், பொதுக் கொள்கை முதுகலைப் பட்டப்படிப்பையும் முடித்தவராவார்.
அரசு மருத்துவத்துறையில் பணியைத் துவக்கிய உமா குமரன், இளம்வயதிலேயே அரசியலில் நுழைந்தார்.
லேபர் கட்சியில் பல நிலைகளில் பல பொறுப்புகளை வகித்த அவர், லண்டன் மாநகர மேயரான சாதிக் கானின் மூத்த ஆலோசகராகவும் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
அரசு மருத்துவத்துறையில் பணியைத் துவக்கிய உமா குமரன், இளம்வயதிலேயே அரசியலில் நுழைந்தார்.
லேபர் கட்சியில் பல நிலைகளில் பல பொறுப்புகளை வகித்த அவர், லண்டன் மாநகர மேயரான சாதிக் கானின் மூத்த ஆலோசகராகவும் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
C40 Cities Climate Leadership Group என்ற பருவநிலை மாற்றம் தொடர்பான குழுவின் ஊடாக ஐ.நா. உள்ளிட்டப் பல்வேறு பன்னாட்டுத் தளங்களிலும் பணியாற்றியுள்ள உமா குமரன், லேபர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மரின் கீழ் சில முக்கிய அரசியல் பொறுப்புகளை வகித்திருந்த நிலையில், கிழக்கு லண்டனில் புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்ட்ராட்ஃபோர்ட் அண்ட் போ தொகுதியில் போட்டியிட்டு அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
’எனது பெற்றோர் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் இருந்து தப்பிவந்தவர்கள், எனது குடும்பமும் எம்மைப் போன்ற ஏனையவர்களும் இன்றுவரை அந்தப் போரின் வடுக்களுடேனேயே வாழ்கின்றோம்’ என்று தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் கூறியுள்ளார் உமா குமரன்.
தேர்தலில் வெற்றி பெற்ற உமா குமரனுக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அத்துடன், தேர்தலில் வெற்றி பெற்ற உமா குமரனுக்கு, அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி, ஏராளமான தமிழர்கள் உலகம் முழுவதிலுமிருந்து அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.