ஒட்டுக்குழு தொடர்பில் பிள்ளையானின் கருத்துக்கள்..!

tubetamil
0

 பிள்ளையானிடம் ஜேவிபி ஆயுதம் கேட்டிருந்தால் பிள்ளையான் அந்த காலத்திலேயே சென்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை செய்திருக்கமுடியும்.அநுரகுமார திசாநாயக்க மட்டக்களப்பில் பிள்ளையானின் ஒட்டுக்குழு தொடர்பில் பேசியபோது பிள்ளையான் இவ்வாறான கருத்துகளை வெளியிடுவது வேடிக்கையான விடயமாகும் என இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பில் ஊடக மையத்தில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ”பிள்ளையானால் முடியுமானால் இன்று கூட சென்று யார் ஆயுதம் கேட்டது, எப்போது கேட்டது என்பது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யமுடியும்.

இப்போது பிள்ளையான் ரணில் விக்ரமசிங்கவுடன் உள்ளார். ரணிலிடம் சென்று கூறி பொலிஸ் மூலம் இது தொடர்பில் விசாரணை நடாத்தமுடியும்.

இலங்கையில் சட்ட விரோதமாக யார் ஆயுதம் வைத்திருந்தாலும் அந்த ஆயுதங்கள் களையப்படவேண்டும்.பாதாள உலக குழுக்கள்,போதைப்பொருள் வியாபாரிகள் அழிக்கப்பட வேண்டும்.

தமிழ்-சிங்கள,முஸ்லிம் மக்கள் எந்தவித அச்சமின்றிய சூழ்நிலையில் பேதங்கள் அற்றுவாழும் நிலைமை ஏற்படுத்தப்படவேண்டும்.

மேலும், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் இந்த ஆண்டு ஜுலை வரையில் பலவிதமான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

120 நாட்டிகள் தொடர்ச்சியான போராட்டத்தினை முன்னெடுத்து மூன்றில் ஒரு சம்பள அதிகரிப்பினை பெற்றுக்கொண்டோம்.

இந்த அரசாங்கம் இந்த வருட வரவு செலவு திட்டத்தில் 44பில்லியன் ருபாவினை ஒதுக்கியுள்ளதாக சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

சந்திப்புக்களில் எல்லாம் இவற்றினை அவர் எங்களிடம் தெரிவித்தார்.அது உண்மையில் பொய் என்பது தற்போது தெரியவந்துள்ளது“ என்றும் பொதுச்செயலாளர் மகிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top