மித்தெனிய, கிழக்கு விக்கிரம மாவத்தை பகுதியில் மீன் வளர்க்கும் தொட்டியில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இந்த விபத்து நேற்று (07) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மித்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் 3 வயது நிரம்பிய சிறுவனே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளான்.
வீட்டின் முன் மீன் வளர்ப்பதற்காக கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.