நாட்டை கட்டியெழுப்ப முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எடுத்த சரியான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் இடம்பெற்ற கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்ப ஆதரவளிக்குமாறு தான் முதலில் கோரியதாகவும், அன்றைய தினம் அவர் எடுத்த சரியான தீர்மானத்திற்கே நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு நாடு பாரிய அரசியல் மற்றும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த போது, நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை தாம் மட்டும் ஏற்கவில்லை என அவர் கூறியுள்ளார்.