முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின்படி, பொதுக் கல்விக்கு அழகியல் பாடங்கள் அத்தியாவசியமானவை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இலங்கையிலும் ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியில் அழகியல் பாடங்களை கற்க முடியும்.அதன்படி, க.பொ.த சாதாரண மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளிலும் அழகியல் பாடங்களுக்கான பரீட்சைகளுக்கு மாணவர்கள் தோற்ற முடியும் என கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, உயர்கல்வியில் அழகியல் பாடங்களும் அதே முறையில் இருப்பதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், அழகியல் பாடங்கள் தொடர்பில் பல்வேறு ஊடகங்கள் ஊடாக வெளியிடப்படும் தவறான கருத்துக்கள் மற்றும் அனுமானங்களை இல்லாது ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.