மொட்டு கட்சிக்கான வேட்பாளர்

tubetamil
0

 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரின் பெயர் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை நியமிப்பதற்கு ஏன் தாமதம் ஏற்பட்டது என்பது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் விளக்குகையில்,  "பொதுஜன பெரமுனவின் கட்டமைப்பும் வியூகமும் ஜனாதிபதி வேட்பாளரை 4 முதல் 6 வாரங்களுக்குள் வெற்றி பெறச் செய்யும் அளவுக்கு பலமாக இருக்கின்றது.

இதற்கமைய, அச்சமடைந்து ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க மாட்டோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கு இணங்குகின்ற வேட்பாளரை இம்மாத இறுதியில் அறிவிக்க உள்ளதுடன், வேட்பாளரை நியமிப்பதில் நாம் அவசரப்படவில்லை. எமது வேட்பாளர், ஏற்கனவே அடிமட்ட ஒழுங்கமைப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றார்" என குறிப்பிட்டுள்ளார். 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top