நேர்மையான தொழிற்சங்க போராட்டங்களை பிரித்தாளும் அரசாங்கத்தின் தந்திரம் தற்போது வெளிப்படுத்தப்படுவதாக வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் விஜயராசா விஜயரூபன் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
'' எமது உரிமைகளை போராடி பெறவேண்டிய நிலையே இங்கு காணப்படுகிறது.
அது இன விடுதலை போராட்டமாக இருந்தாலும் சரி, தொழிற்சங்க போராட்டமாக இருந்தாலும் சரி அதனை போராடி பெரும் நிலையே காணப்படுகிறது.'' என்றார்.