திரமணமான புது தம்பதிகள் தேனிலவு செல்ல சுற்றுலாப்பயணங்கள் மேற்கொள்ளும் போது அவர்களுக்கான ஏற்ற இடங்கள் எது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த சுற்றுலா தலங்களில் இயற்கையும் அதற்கேற்ற மன அமைதியையும் சேர்த்து தரக்கூடியவை. இந்த அமைதியான இடங்களுக்கு நடுவில் அமைதியான இல்லற வாழ்க்கை ஆரம்பித்தால் அது சிறப்பாக இருக்கும்.
குடகு எனும் இடம் இது இந்தியாவில் இருக்கும் ஒரு அழகான மற்றும் குறைவாக அறியப்பட்ட தேனிலவுக்குரிய இடம் இதனை "இந்தியாவின் ஸ்காட்லாந்து" என்று குறிப்பிடுவர்.
இங்கே பல இடங்கள் காணப்படுகின்றது. சிறிய நகரம் ஏரிகள், காபி தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், அழகிய மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் மற்றும் கம்பீரமான கோயில்கள் உள்ளிட்ட ஏராளமான இயற்கை அழகால் நிறைந்துள்ளது.
அடுத்து சிம்லா எனும் இடம் இது ஒரு மலை பிரதேசம். ஒரு குறைவான பட்ஜெட்டில் நல்ல இடம் பார்க்க வேண்டும் எனறால் அதற்கு இது ஒரு சிறந்த இடமாகும். இது இயற்கையால் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
பீரி எனும் இடம் இங்கே அழகின் புதையல் நகரமாகும். இது கோவாவின் கடற்கரைகளைதோற்க வைக்கும் அளவிற்கு அழகு நிறைந்த இடம். இது தேனிலவிற்கு ஏற்ற இடம். இது போன்ற இடங்களில் தேனிலவு சென்றால் இல்லற வாழ்கை இன்பமாக இருக்கும்.