உடல் எடையைக் குறைப்பதற்கு அருமையான சூப் ஒன்றினை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பதற்கு பல வழிகளில் முயற்சித்து வரும் நிலையில், ஆரோக்கியமான சில உணவு டயட் மூலம் ஈஸியாக குறைத்து விடலாம்.உடல் எடையை குறைக்க உதவும் முக்கிய உணவு வகைகளில் பாசிப்பருப்பு சூப்பும் ஒன்றாக இருந்து வருகிறது. இதில் இருக்கும் ஊட்டச்சத்துகள், குறைவான கலோரிகள் எடை இழப்புக்கு உதவுவதோடு, உணவு பழக்கத்தில் சேர்க்ககூடிய ஆரோக்கியமான டயட்டாகவும் உள்ளது.
ஆசிய உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் பாசிப்பயிறு வகைகள். இதிலிருந்து தான் பாசிப்பருப்பு உடைத்து எடுக்கின்றனர். 16.3 கிராம் நார்ச்சத்து, 23.9 கிராம் புரதம், 4.8 மி.கி வைட்டமின் சி, 2.25 மி.கி நியாசின், 1250 மி.கி பொட்டாசியம், 132 மி.கி கால்சியம், மற்றும் 6.74 மி.கி இரும்பு உள்ளது.
ஒரு கப் பாசிப்பருப்பு சூப்பில் 150 முதல் 200 கலோரிகள் இருக்கும் நிலையில், இதனை நாம் எடுத்துக் கொள்ளும் அளவைப் பொருத்து உடல் எடை குறையும்.
அதிக புரத உள்ளடக்கம் தசை நிறையை உருவாக்கவும், பராமரிக்கவும் உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. நார்ச்சத்து உள்ளடக்கம் வயிறு நிரம்பிய திருப்தியை உண்டாக்குகிறது. அத்துடன் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது.
சூப் செய்ய தேவையான பொருள்கள்
பச்சை பயறு அல்லது பாசிப்பருப்பு - 1 கப்
வெங்காயம் பொடிதாக நறுக்கியது - 1
தக்காளி பொடிதாக நறுக்கியது - 1
கேரட் நறுக்கியது - 1
பூண்டு பற்கள் - 2-3
இஞ்சி துருவியது - 1 சிறிய துண்டு
பச்சை மிளகாய் நறுக்கியது - 1
சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
காய்கறி அல்லது தண்ணீர் - 2 கப்
எண்ணெய் அல்லது நெய் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலைகள் - தேவைக்கு ஏற்ப
பச்சைப் பருப்பு அல்லது பாசிப்பருப்பை நன்கு கழுவி குறைந்தது 2 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிய பின்பு, குக்கர் ஒன்றில் போட்டு, அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவைத்து எடுக்கவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி சூடான பின்பு சீரகத்தூள், பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அதன் வாசனை போகும் வரை வதக்கி, நறுக்கிய வெங்காயம், தக்காளி கேரட் சேர்த்து நன்கு வதக்கி வேக வைக்கவும்.பின்பு இதனுடன் வேக வைத்திருக்கும் பருப்பையும் சேர்த்து கொத்தமல்லி மற்றும் கரம் மசாலா உப்பு சேர்த்து 10 நிமிடம் களித்து இறக்கவும்.