ஐக்கிய தேசியக் கட்சியின் தம்புள்ளை தொகுதியின் செயற்பாட்டு அலுவலகத்திற்கு முன்பாக உள்ள பதாகைகளை சிலர் உடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தம்புள்ளை மாநகரசபையின் முன்னாள் தவிசாளர் மாயா பதெனியவின் வீட்டில் இந்த அலுவலகம் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தம்புள்ளை தொகுதி அமைப்பாளர் ஆகியோரின் உருவம் பொறிக்கப்பட்ட பதாகைகளே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.