ஏற்றுக்கொண்ட இந்திய அரசாங்கத்தின் முன்மொழிவின் அடிப்படையில், புதுடில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட பெட்ரோநெட் எல்என்ஜி லிமிடெட், இலங்கையின் கெரவலப்பிட்டியவில் உள்ள வெப்ப ஆலைகளுக்கு ஒரு நாளைக்கு 40 கொள்கலன்கள் என்ற விகிதத்தில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வழங்கவுள்ளது.
இவை இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் இருந்து அனுப்பப்பட்டு, கெரவலப்பிட்டியவில் உள்ள இலங்கையின் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் நடத்தப்படும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு சாலை வழியாக கொண்டு செல்லப்படும்.
திட்டப்படி, இந்திய நிறுவனம், ஒரு நாளைக்கு 60-70 கொள்கலன் அளவில் ஏற்றுமதியை விரிவுபடுத்த சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆனால், போட்டி கேள்வி, பத்திரக்கோரல் இல்லாததால் ஒப்பந்தத்தின் தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது.
இது அரசாங்கத்திற்கு-அரசாங்கத்திற்கு (G-to-G) ஒப்பந்தம் என்று விபரிக்கப்படுகிறது
எனினும் இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான PLL இலிருந்து எரிவாயுவை நேரடியாக வாங்குவதற்கு, சுருங்கிய உரிமைக் கட்டமைப்பைக் கொண்ட ஹோல்டிங்ஸ் லிமிடெட்.டிகு உரிமம் வழங்க முன்மொழிந்துள்ளது.
முன்னதாக, சீன ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி (CHEC) மற்றும் பாகிஸ்தானின் என்க்ரோ கோர்ப்பரேஷன் ஆகியவை கெரவலப்பிட்டியில் மிதக்கும் சேமிப்பு மற்றும் மறு எரிவாயு அலகு, கடல் மற்றும் கடலோர மறு எரிவாயு எல்என்ஜி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகளை வழங்கியிருந்த போதும், கடந்த ஆண்டு, அவற்றை இடைநிறுத்தியது.