அத்கால, உலப்பனே பகுதியில் வயதான மூதாட்டி ஒருவர் பேரனின் மனைவியால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இக்கொலை நேற்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் உலப்பனை பிரதேசத்தில் வசிக்கும் 78 வயதுடைய மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண் தனது பேரன் அவருடைய மனைவி மற்றும் அவர்களது 2 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்கால பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.