சடுதியாக குறைவடைந்த அரச ஊழியர்களின் சம்பளம்..!

tubetamil
0

 2020 மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கிடையில் அரச ஊழியர் ஒருவரின் சம்பளத்தின் உண்மையான பெறுமதி முப்பத்தாறு வீதத்தால் (36%) குறைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

மேலும், தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தின் உண்மையான பெறுமதி சுமார் இருபது வீதத்தால் (20%) குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, 2020 ஆம் ஆண்டுக்குள் ஐம்பதாயிரம் ரூபா சம்பளம் பெற்ற ஒருவரின் உண்மையான சம்பளம் 32000 ரூபாவாக குறைந்துள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு இலட்சம் ரூபா (100000) சம்பளம் பெற்ற ஒருவரின் உண்மையான சம்பளம் 64000 ரூபா எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும், ஒரு இலட்சம் ரூபா (100000) சம்பளம் பெற்ற ஒருவரின் உண்மையான சம்பளம் 64000 ரூபா எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, இரண்டு இலட்சம் ரூபா சம்பளம் பெற்ற ஒருவரின் உண்மையான சம்பளத்தின் பெறுமதி ஒரு இலட்சத்து இருபத்தெட்டாயிரம் ரூபா என்றும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

தற்போது வரி செலுத்த வேண்டியுள்ளதன் காரணமாக 100,000 ரூபாவுக்கு மேல் சம்பளம் வாங்கும் நபரின் கொள்வனவு சக்தியும் குறைந்துள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top