இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அரசாங்கம் 796.5 பில்லியன் ரூபாயை கடனாகப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு வெளியிட்டுள்ள மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் கடன் சேவை மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக உள்நாட்டு கடனாக 734.2 பில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு திட்டக்கடனாக பெறப்பட்ட தொகை 62.3 பில்லியன் ரூபாய் ஆகும்.
மேலும், 2024ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் உள்நாட்டுக் கடனுக்கான வட்டியை செலுத்துவதற்காக 692.1 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டுக் கடனுக்கான வட்டியை செலுத்துவதற்காக செலவிடப்பட்ட தொகை 34 பில்லியன் ரூபா ஆகும்.
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், நாட்டின் கடன்களில் தோராயமாக 92.2 சதவீதம் உள்நாட்டிலிருந்து பெறப்பட்டவை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.