மெட்ரோ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சிரிஷ்.
ராஜா ரங்குஸ்கி, பிஸ்தா போன்ற படங்கள் மூலம் மக்களை கவர்ந்த இவர் கிடைக்கும் நல்ல நல்ல படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருந்தாலும் சமூக பணிகளிலும் ஆர்வம் காட்டியவர்.
கொரோனா காலத்தில் இவர் மக்களுக்கு தன்னால் முடிந்த நிறைய உதவிகளை செய்து வந்தார்.
இந்த நிலையில் நடிகர் சிரிஷிற்கு கோலாகலமாக நேற்று (ஜுலை 12) திருமணம் நடந்துள்ளது. ஹஸ்னா என்பவருடன் நடிகர் சிரிஷிற்கு திருமணம் நடந்துள்ளது, தாலி கட்டும் போது எடுக்கப்பட்ட அழகிய போட்டோ வெளியாகியுள்ளது.