பாடசாலை மோசடி விவகாரம்..!

tubetamil
0

 முல்லைத்தீவு விசுவமடு பிரதேச பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மணிவிழா மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை வடமாகாண கல்வி திணைக்களத்திடம் பாரப்படுத்தி உள்ளது.

ஏற்கனவே குறித்த முறைகேடுகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் உரிய திணைக்களங்களுக்கு அனுப்பப்பட்டும் உரிய தரப்பினர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் முன்னணி சமூக ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களிலும் வெளிவந்த நிலையிலும் முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிமனையும் வடமாகாண கல்வி திணைக்களமும் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.


குறித்த முறைகேடு தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு  இலஞ்சம் ஊழல்களுக்கு எதிரான முறைப்பாடு ஆணைக்குழுவுக்கு முறையிட்டதைத் தொடர்ந்து, வட மாகாண கல்வித் திணைக்களத்தை உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு தமக்கு அறிக்கை அனுப்புமாறு ஆணைக்குழு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top