ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சரத் பொன்சேகாவை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாடாளுமன்ற குழுக் கூட்டம் உள்ளிட்ட கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் அவர் நீக்கப்படவுள்ளதாக அக் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், சரத் பொன்சேக்காவின் அண்மைக்கால நடவடிக்கைகள் கட்சியின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்விடயம் தொடர்பாக நன்கு ஆராய்ந்த பின்னரே இந்த தீா்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.