இந்தியா முதன் முறையாக ஆயுத ஏற்றுமதியில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இதுவரை உள்நாட்டு படையின் ரின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை இந்தியா, நட்பு நாடு ஒன்றுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளது.
இந்த ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகள், 1500 மீற்றர் வரையிலான தூர இலக்குகளை குறி வைக்கக்கூடியவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களுரில் அமைந்துள்ள எஸ்.எஸ்.எஸ்.டிபென்ஸ் என்ற நிறுவனமே இந்த ஆயுத ஏற்றுமதியில் ஈடுபடவுள்ளது.
இந்த தகவல் தொடர்பில் இந்திய பாதுகாப்பு அமைச்சு எவ்வித உறுதிப்படுத்தல்களையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.