இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் உள்வாங்கப்பட்டுள்ள 'ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட' எனும் சொல்லுக்கு பதிலாக "ஐந்து ஆண்டுகளுக்கு அப்பால்" என்ற சொற்களுடன் திருத்துவதற்கு அமைச்சரவை கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்கியது.
09 ஜூலை 2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதற்கமைய சட்ட உருவாக்குனரால் தயாரிக்கப்பட்ட வரைவுக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வரைவு வர்த்தமானியாக வெளியிடப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் இணைந்து முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.