பாடசாலையொன்றில் மாணவ முதல்வனை தாக்கிய மாணவன்..!

tubetamil
0

 முல்லைத்தீவு  ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்பது மாணவனால் பாடசாலையின் மாணவ முதல்வர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயர்தர மாணவராக உள்ள மாணவ முதல்வரால் தரம் 9 மாணவனின் செயற்பாடுகள் தொடர்பில் அந்த மாணவனுக்கு அறிவுறுத்தப்பட்டபோதே, அவர் அந்த மாணவனால் தாக்கப்பட்டதாக பாடசாலை மாணவர் சிலர் இது தொடர்பில் தெரிவித்தனர்.எனினும், தாக்குதலுக்குள்ளான உயர்தர மாணவன் பதில் தாக்குதல் நடத்தியிருக்கவில்லை என்பதோடு இது தொடர்பில் ஆசிரியர்களும், பொறுப்பு வாய்ந்த எத்தகைய நடவடிக்கைகளையும் இதுவரை எடுத்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தின் மூலம் வயதுக்கு மூத்தோரை மதித்து நடக்கும் தமிழரின் பண்பாடு மலையேறி விட்டதோ என்று சந்தேகம் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற செயற்பாட்டின் மூலம் எழுகின்றது.பாடசாலையில் நடைபெற்றிருந்த பெற்றோர் சந்திப்பு ஒன்றில் மாணவர்களின் ஒழுக்கத்திற்கு பாடசாலை நிர்வாகம் பொறுப்பல்ல.அது பெற்றோரையே சாரும் என பாடசாலை அதிபர் வலியுறுத்தி இருந்ததாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

தரம் 9 மாணவன் உயர்தர மாணவனுக்கு பாடசாலை நேரத்தில் பாடசாலையில் வைத்து நடத்திய தாக்குதல் தொடர்பில், பாடசாலை நிர்வாகம் பொறுப்பு வாய்ந்த நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.இது பாடசாலை அதிபரினால் பெற்றோர் சந்திப்பில் கூறியிருந்ததை உறுதி செய்வது போல் தோன்றுவதாக சமூக ஆர்வலர் தெரிவிக்கின்றார்.

ஒரு மாணவ முதல்வரின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளாதபடி ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவர்கள் வளர்க்கப்பட்டுள்ளார்களா? பாடசாலையினால் மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் கவனமெடுத்து சிறந்த பழக்கவழக்கங்களை ஏற்படுத்த முடியாதா? என இது தொடர்பில் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்த வயோதிபத்தை எட்டிவிட்ட பழைய மாணவரையும் சந்திக்க முடிந்தது.

வாழக் கல்மின் என்பது போல பாடசாலைகள் தங்கள் செயற்பாடுகள் தொடர்பில், தூர நோக்கு மற்றும் குறிக்கோள்களை கொண்டு செயற்படும் சிறந்த கல்வியாக முதலில் ஒழுக்கத்தினைத் தான் கற்றுக்கொடுக்க வேண்டும்.


சிறந்த பழக்கவழக்கங்களை பின்பற்றாத எந்தவொரு கல்வியறிவாலும் பயன் இருக்காது என்பது சமூகவியல் கற்றல்களில் ஈடுபடுவோரின் கருத்தாகும்.

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றுள்ள இந்த செயல் அந்த பாடசாலையின் மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் கேள்வி எழுப்புகின்றது.

இந்த அணுகலானது, ஆசிரியர் அதிபரை மதிக்காதவராக அதிபர் வலயக் கல்விப்பணிப்பாளரை மதிக்காதவராக இருப்பதற்கு ஒப்பாகும்.

இதே இயல்போடு மாணவர்கள் வளர்க்கப்பட்டால் இந்த பாடசாலையின் மாணவர்கள் கல்வியறிவால் உயர்ந்த போதும் தம் அலுவலகங்களில் உயரதிகாரிகளை மதித்து நடக்கும் பண்பாடற்றவர்களாக இருந்து விடுவார்கள்.இந்த போக்கு அவர்களின் எதிர்காலத்தினை வெகுவாக பாதித்து விடும் என்பதில் ஐயமில்லை.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top