இந்த காலகட்டத்தில் தொப்பை வருதல் பிரச்சனை மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்த தொப்பை பிரச்சனையை வீட்டில் உள்ள மூலிகையை வைத்து சரி செய்யலாம்.
அதிகமாக உடல் எடை அதிகரிப்பிற்கு அதிகமான உணவுப்பழக்கவழக்கம் தான் காரணம். இந்த எடை அதிகரிப்பின் பின்னர் தொப்பையும் தாறுமாறாக அதிகரிக்கிறது. இந்த தொப்பையை முழுமையாக போக்க முடியவில்லை என்றாலும் கொஞ்சமாக போக்க முடியும்.
இதற்கு வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தலாம். இந்த வீட்டில் உள்ள மூலிகை பொருட்கள் தொப்பையை குறைக்கும். வீட்டில் பயன்படும் மஞ்சள் இதில் குர்குமின் உள்ளது.
இது உடலில் அதிகரிக்கும் போது உடலில் இருக்கும் கொழுப்பு எரிக்கப்படுகின்றது. இது வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவும். இலவங்கப்பட்டை இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது இது இரத்ததில் சச்கரை அளவை கட்டுப்படுத்தி பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
வெந்தயம் பசியை கட்டுப்படுத்தவும் உணவு உண்ணுவதை குறைக்கவும் உதவும். சீரகம் அதிக எடை கொண்ட பெண்களிடம் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி இதை ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் கொழுப்பை மூன்று மடங்கு அதிகமாக எரிக்க உதவும் என தெரியவந்துள்ளது.
இஞ்சி உடலில் உருவாகும் குளுக்கோஸின் அளவை குறைக்க உதவும். பூண்டு காரமான சுவையை கொண்டது இது கொழுப்பை எரிக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
குறிப்பிடப்பட்ட இந்த மூலிகை பொருட்களை நாளாந்த உணவிலோ அல்லது வேறு ஏதாவது முறையிலோ சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறையும். அத்துடன் தொப்பையும் குறையும்.